
காஜாங், டிசம்பர் 19-காஜாங், சுங்கை ராமால் டோல் சாவடியில் நேற்றிரவு நடத்தப்பட்ட சாலைத் தடுப்புச் சோதனையில், போதைப்பொருள் உட்கொண்டிருந்த 8 ஆடவர்கள் கைதாகினர்.
45 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதில், அந்த 8 பேர் methanamine மற்றும் கஞ்சா உட்கொண்டது உறுதிச் செய்யப்பட்டது.
இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை சிலாங்கூர் JPJ மற்றும் போக்குவரத்து போலீஸாரும் ஒருங்கிணைந்து நடத்திய அந்நடவடிக்கையில், மொத்தம் 2,185 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவற்றில் 301 வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, 422 நோட்டீசுகள் வழங்கப்பட்டன.
மொத்தமாக 637 சாலை விதிமுறை மீறல்களும் பதிவுச் செய்யப்பட்டன.
ஓட்டுநர் உரிமம் இல்லாதது, சாலை வரி காலாவதியானது, காப்பீடு இல்லாது மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகள் ஆகியவை முக்கியமான குற்றங்களாக இருந்தன.
13 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையில், போக்குவரத்து போலீஸார் தனியாக 21 சம்மன்கள் வழங்கினர்.



