
கோலாலம்பூர், ஜூலை 23- இவ்வாண்டு மலேசியா தனது 68ஆவது சுதந்திர தினத்தையும் 62ஆவது மலேசியா தினத்தையும் கொண்டாடவுள்ள நிலையில், மலேசிய தகவல், தொடர்பு அமைச்சுடன் தேசிய தகவல் துறையும் இணைந்து இதன் கொண்டாட்டத்தை பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக, எதிர்வரும் ஜூலை 27 ஆம்தேதி ஜோகூரில் மூவாரில் உள்ள டத்தாரான் தஞ்சோங் மாஸில் நடைப்பெறும் MAJLIS PELUNCARAN BULAN KEBANGSAAN மற்றும் KEMPEN KIBAR JALUR GEMILANG 2025 நிகழ்ச்சியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிறைவு செய்யவிருக்கிறார்.
இதனை முன்னிட்டு ஜூலை 25ஆம்தேதி முதல் ஜூலை 27ஆம் தேதிவரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்.
மேலும் தேசிய கொடிகளை மலேசியர்கள் முறையாக பறக்கவிடவும் இது தொடர்பான விளக்கவுரைகளும் பொதுமக்கள் JABATAN PENERANGAN MALAYSIA அகப்பக்கம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நாட்டு பற்று விதைக்கும் தேசிய கொடியான ஜாலூர் கெமிலாங் கொடியை பறக்கவிடுவோம், சுதந்திர மாதத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்போம்.