Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

சுற்றுச் சூழல் & பாதுகாப்புக் காரணங்களுக்காக எவரெஸ்ட் மலையேற்றத்திற்கான பெர்மிட் கட்டணம் 36% உயர்வு

காட்மண்டு, ஜனவரி-27 – எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான பெர்மிட் கட்டணத்தை நேப்பாள அரசாங்கம் 36 விழுக்காடு அதிகரித்துள்ளது.

வரும் செப்டம்பர் முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

சுமார் பத்தாண்டுகளில் இக்கட்டணம் உயர்த்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.

சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு சவால்களைச் சமாளிக்கும் வகையில் பெர்மிட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

என்றாலும்,
எவரெஸ்ட் பயணங்களின் எதிர்காலம் மற்றும் மலையேறும் சுற்றுலாவில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாமென, விவாதங்கள் சூடு பறக்கின்றன.

திருத்தப்பட்ட கட்டணங்கள் இலையுதிர், குளிர்காலம் மற்றும் மிகவும் விரும்பப்படும் வசந்த காலங்களில் மலையேறும் நடவடிக்கைகளுக்குப் பொருந்தும்.

அவ்வகையில் பரபரப்பான வசந்த காலத்தில் பெர்மிட் கட்டணம் 11,000 -யிரம் டாலரிலிருந்து 15,000 டாலர் வரையில் அதிகரிக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!