
செகாமாட், மார்ச்-16 – மக்கள் மத்தியில் பிரபலமான ETS மின்சார இரயில் சேவை, நேற்று ஜோகூர் செகாமாட்டிலிருந்து, பெர்லிஸ் பாடாங் பெசாருக்கான தனது வெள்ளோட்டத்தை தொடங்கியது.
காலை 7.55 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.57 மணிக்கு இரயில் தனது இலக்கை அடைந்ததாக, KTMB தலைமை செயலதிகாரி Rani Hisham Samsudin கூறினார்.
முக்கிய நகரங்களை கடந்துச் செல்லும் இப்புதியச் சேவை, செகாமாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ETS இரயில் சேவை தற்போது செகாமாட் வரை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதை விளம்பரப்படுத்தும் பணிகள் 3 நாட்களாகவே முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு அலுவலகங்கள், பேரங்காடிகள், மசூதிகள், இரமலான் சந்தைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவை நடைபெறுவதாக Rani சொன்னார்.
இந்த வெள்ளோட்ட பயணத்தை கொண்டாடும் வகையில், செகாமாட் இரயில் நிலையத்திற்கான EG9321, EG9322, EG9420 மற்றும் EG9425 இரயில் சேவைக்கு 10 ரிங்கிட் டிக்கெட் கட்டணக் கழிவும் வழங்கப்படுகிறது.
எனினும் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் அது உட்பட்டது.
இது தவிர, KTMB நிறுவனத்தின் பிரத்தியேக நினைவுச் சின்னங்களும் இலவச சுகாதார பரிசோதனையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
டிக்கெட்டுகளுக்கு, KTM கைப்பேசி செயலியான KITS, அதன் இணையத்தளமான www.ktmb.com.my, KTMB கியோஸ்க் தானியங்கி இயந்திரங்கள், அல்லது KTMB வாடிக்கையாளர் சேவை மையத்தை 03-9779 1200 என்ற எண்களில் தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்யலாம்.