
செகிஞ்சான், ஜூலை 23 – நேற்று, சிலாங்கூர் சுங்கை லெமானிலுள்ள சுங்கை பான் கால்வாயில் பழைய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணிக்கு ஆற்றை சுத்தம் செய்யும் போது 33 வயதான இந்தோனேசிய தொழிலாளி ஒருவர் இன்னும் செயல்பாட்டிலுள்ள வெடிபொருளைக் கண்டுபிடித்துள்ளார் என்று சபாக் பெர்னாம் காவல்துறைத் தலைவர் முகமட் யூசோப் அகமது தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த நபர் செகிஞ்சான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளத்தைத் தொடர்ந்து சிலாங்கூர் காவல் தலைமையக வெடிகுண்டு அகற்றும் பிரிவுனர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றுள்ளனர்.
அதே நாளில் வெடிகுண்டு அகற்றும் குழு மின்சார நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த வெடிபொருளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மிக பாதுகாப்பாக அழித்துள்ளார் என்று யூசோப் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, சமூக ஊடகங்களில் பரவிய ஒரு காணொளியில், பழைய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதுக் குறிப்பிடத்தக்கது.