
ஷா ஆலாம், அக்டோபர்-25 – சிலாங்கூர், செத்தியா ஆலாமில் ஒரு பெண்ணுக்காக நடந்த சண்டையில் ஒரு முதியவர் உட்பட 3 ஆடவர்களை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
நான்காவது நபரைத் தேடி வருகின்றனர்.
சந்தேக நபர்களில் ஒருவரின் காதலி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக, ஷா ஆலாம் போலீஸ் கூறியது.
நேற்று முன்தினம் பிற்பகலில் அச்சண்டை குறித்து புகார் அளிக்கப்பட்டது; அதோடு வீடியோவிலும் பதிவாகி இச்சம்பவம் வைரலானது.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ், 22, 44 மற்றும் 69 வயதுடைய அம்மூன்று ஆடவர்களையும் கைதுச் செய்தது.
சண்டையின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 91 சென்டி மீட்டர் நீளமுள்ள ஒரு குச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.



