Latestமலேசியா

சென்னையில் மருத்துவரைக் சரமாரியாகக் கத்தியால் குத்தி விட்டு சர்வ சாதாரணமாக நடந்துச் சென்ற இளைஞன்; வைரலாகும் வீடியோ

சென்னை, நவம்பர்-14 – சென்னை கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவின் தலைமை மருத்துவரை, இளைஞன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர் பாலாஜியை சரமாரியாகக் குத்தி விட்டு, கத்தியிலிருந்த இரத்தக் கறையைத் துடைத்துப் பாக்கெட்டில் வைத்தவன், பின்னர் அதை ஓரமாக போட்டு விட்டு சர்வ சாதாரணமாக நடந்துச் செல்லும் வீடியோ இந்தியா முழுவதும் வைரலாகியுள்ளது.

மருத்துவமனையிலிருந்து வெளியேறும் முன்பாக அவனை மடக்கிப் பிடித்த பாதுகாவலர்களும் அங்கிருந்தவர்களும் அவனைப் போலீசிடம் ஒப்படைத்தனர்.

விக்னேஷ் எனும் அவ்விளைஞனை 15 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க போலீசார் அனுமதிப் பெற்றுள்ளனர்.

கைதான இளைஞனின் தாயார் புற்று நோய்க்காக கடந்த ஒரு மாத காலமாக அம்மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தாயாருக்குத் தவறான மருந்தை தந்து விட்டதாக சந்தேகப்பட்டே, மருத்துவரை அவன் கத்தியால் குத்தியதாகத் தெரிகிறது.

உடலில் ஏழு இடங்களில் கத்திக் குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!