
புத்ராஜெயா, பிப்ரவரி-14 – ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி சனிக்கிழமை ‘Hari Cuci Malaysia’ அதாவது மலேசியாவை சுத்தப்படுத்தும் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தூய்மை குறித்து நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், அமைச்சரவை அம்முடிவை எடுத்துள்ளது.
மலேசியாவை, சுத்தமான, அழகான, அமைதியான நாடாக உருமாற்றும் நோக்கத்தை அது கொண்டிருப்பதாக, வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
இந்த Hari Cuci Malaysia திட்டம் பல்வேறு மட்டத்திலான மக்களை உட்படுத்தி, இவ்வாண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி பேரளவில் மேற்கொள்ளப்படும்.
அதற்கு, பள்ளி மாணவர்கள் உட்பட 100,000 பேரை திரட்ட இலக்கு வைத்திருப்பதாக அமைச்சர் சொன்னார்.
கடந்தாண்டு 58,000 பேருடன், 4,645 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.