Latestமலேசியா

சுமார் 4,000 Perodua கார்களையும் Honda மோட்டார் சைக்கிள்களையும் திரும்ப அழைக்கும் JPJ

புத்ராஜெயா, நவம்பர்-4 – சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ, Perodua Alza மற்றும் Aruz கார்கள், Honda CB350RS ரக மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 3,722 வாகனங்களைத் திரும்ப அழைத்துள்ளது.

அவற்றில் 3,657 Perodua கார்களின் முதன்மை விளக்குகொளியின் உயர இலக்கு, நிர்ணயிக்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டைப் பூர்த்திச் செய்யாததே அதற்குக் காரணமென, JPJ தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார்.

அதே சமயம், 65 மோட்டார் சைக்கிள்களில் சக்கரங்களின் வேக சென்சரில் ஏற்பட்ட கோளாறால், ABS பாதுகாப்பு அம்சம், வேக மீட்டர் போன்றவை துல்லிதமில்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட உபரிப் பாகங்களை மாற்றுவதற்கானச் செலவை சம்பந்தப்பட்ட வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான Perodua Manufacturing Sdn Bhd மற்றும் Boon Siew Honda Sdn Bhd-டே ஏற்றுக் கொள்ளும்.

பாதிக்கப்பட்ட மாடல்களைச் சேர்ந்த வாகனங்களின் உரிமையாளர்களை அவ்விரு நிறுவனங்களும் தொடர்புக் கொள்ளும்.

அல்லது வாகனமோட்டிகளும் அருகிலுள்ள சர்வீஸ் மையங்களுக்கு walk-in முறையில் செல்லலாமென, நேற்று வெளியிட்ட அறிக்கையில் JPJ கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!