
காஜாங், பிப் 24 – குத்தகையாளரான தனது கணவரை கொலை செய்ததாக குடும்ப மாது ஒருவருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
பிப்ரவரி 16ஆம் தேதியன்று Semenyih,பண்டார் தெக்னோலேஜியிலுள்ள (Bandar Teknologi) அடுக்குமாடி வீடு ஒன்றில் 59 வயதுடைய ஹியு பிட் லீ ( Hew Pit Lee ) இக்குற்றத்தை புரிந்ததாக மாஜிஸ்திரேட் Fatin Dayana Jalil முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கொலைக் குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் அந்த பெண்மணியிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
தனது கணவரான 61 வயது Wong Chee Min என்பவரை பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி காலை பத்தரை மணிக்கும் 11 மணிக்குமிடையே கொலை செய்ததாக Pit Lee மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் Pit Lee மீது மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர் மீதான குற்றஞ்சாட்டு மீண்டும் மறுவாசிப்புக்காக ஏப்ரல் 17ஆம் தேதி செவிமடுக்கப்படும்.