தம்பின், ஏப் 30 – Gemas , Felda Sungai Kelema செம்பனைத் தோட்டத்திற்கு அருகே மனித எலும்புக் கூட்டுடன் ஒரு மோட்டார் சைக்கிளும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Amiruddien Sariman தெரிவித்திருக்கிறார். இடைவார் மற்றும் தலைக்கவசமும் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். Yamaha LC நீல நிற மோட்டார் சைக்கிள் கண்டுப்பிடிக்கப்பட்ட இடத்தில் மனித எலும்புக்கூடும் காணப்பட்டதாக பொதுமக்களில் ஒருவரிடமிருந்து Gemas போலீஸ் நிலையத்திலுள்ள அதிகாரி நேற்று நண்பகல் மணி 2.10 அளவில் தகவலை பெற்றுள்ளார். அந்த தகவலைத் தொடர்ந்து அந்த செம்பனை தோட்டத்திற்கு போலீஸ் குழுவினர் சென்று பார்த்தபோது உடல் பகுதியின் பிட்டத்திலிருந்து கால்வரை மனித எலும்புக் கூடு நீர் வற்றிய கால்வாயில் காணப்பட்டது.
அந்த மோட்டார் சைக்கிள் இருந்த இடத்திற்கும் மனித எலும்புக் கூடு காணப்பட்ட இடத்திற்கும் 15 மீட்டர் குறைவாக இருக்கக்கூடும் என Superintendan Amiruddien வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். மேலும் 10 மீட்டர் நீளமுள்ள முதுகெலும்பு மற்றும் மோட்டார் சைக்கிள் காணப்பட்ட இடத்திலிருந்து 80 மீட்டருக்கு அப்பால் மனித மண்டை ஓடும் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவை மரபணு பரிசோதனைக்காக தம்பின் மருத்துவமனையின் தடயயியல் துறைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Amiruddien தெரிவித்தார்.