
செர்டாங், ஜூலை 17 – செர்டாங் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலுள்ள மைதானம் ஒன்றில், இரண்டு ஆண்கள் ஒருவரையொருவர் குத்திக் கொண்டு உதைத்து கொள்ளும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, இதேபோன்ற அடிதடி காணொளியை வெளியிட்ட இவர்கள், தங்களுக்குள்ளாகவே சமாதானம் அடைந்து பிரச்சனையை முடித்து கொண்டப்போதும், மீண்டும் அதே தவற்றை செய்துள்ளனர் என்று போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
இம்முறை கைது செய்யப்பட்ட இவ்விருவரும், குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது ஃபரித் அகமது தெரிவித்துள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆறு மாத சிறைத்தண்டனை, மற்றும் 1,000 ரிங்கிட் வரையிலான அபராதம் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், பொதுமக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுப்பதை தவிர்க்க வேண்டுமென்றும், சட்டத்தை மீறுபவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.