
புத்ரா ஜெயா, ஆக 15 – ஜோகூரில் உள்ள ஒரு தொழிற்சாலை சிற்றுண்டி நிலையத்தில் சமையல்காரர்களாகப் பணிபுரிந்த ஒரு தம்பதியினருக்கு, இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, ஊதியம் பெறாத கூடுதல் நேரக் கோரிக்கைகளில் மொத்தம் 162,420 ரிங்கிட் வழங்கப்பட்டது.
நீதிபதி லிம் சோங் பாங் ( Lim Chong Fong ) தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
வேலைவாய்ப்புச் சட்டம் ஒரு நபரின் பணிநேரத்தை ஒரு நாளைக்கு எட்டு மணிநேரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது, ஆனால் தம்பதியினரான Ee Yueh Horng , Tan Ei Guanரின் ஒப்பந்தம் அவர்கள் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அந்த தம்பதியர் கோரிய மொத்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே நீதிமன்றம் அனுமதித்தது.
இக்கோரிக்கைகளின் ஒரு பகுதி ஏற்கனவே ஒட்டுமொத்த கணக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இப்போது மனைவிக்கு 96,732 ரிங்கிட் மற்றும் கணவருக்கு 65,688 ரிங்கிட் செலுத்த வேண்டும் என நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தொகை மார்ச் 12, 2023 ஆண்டு அன்று தொழிலாளர் நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு 5 விழுக்காடு வட்டியை உள்ளடக்கியது.