Latest

சைபர்ஜெயாவில் பசுமை புரட்சி: உலகின் முதல் சூழலியல் தரவுத்தள முன்னோடியாகத் திகழும் Basis Bay

சைபர்ஜெயா, நவம்பர்-6 – நிலையான தொழில்நுட்ப வளர்ச்சிக்காக Basis Bay நிறுவனம், Cyberjaya DC2 எனும் உலகின் முதல் சூழலியல் பசுமைத் தரவுத்தளத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

ST Telemedia Global Data Centres நிறுவனத்தின் ஒத்துழைப்போடு இது உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மையம் பாதுகாப்பான, தேசிய கட்டுப்பாட்டில் உள்ள, மற்றும் நிலைத்த டிஜிட்டல் கட்டமைப்புக்கான புதிய தரத்தை நிர்ணயிப்பதாக, Basic Bay நிர்வாகத் தலைவர் டத்தோ பிரபா தியாகராஜா கூறினார்.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த இந்த மையம், TIA-942 Rated-4 மற்றும் ISO 27001 தர நிர்ணயங்களைப் பூர்த்திச் செய்கிறது.

அதோடு, சூரிய சக்தி, மழைநீர் சேமிப்பு, செடிகள் மற்றும் திறமையான குளிரூட்டும் அமைப்புகள் மூலம் PUE 1.49-க்கு கீழ் செயல்திறனை அடைகிறது.

பன்மடங்கு பாதுகாப்பு மற்றும் சைபர் நிலைத்தன்மை கொண்ட இம்மையம், மலாயாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மலேசியாவின் முதல் தரவுத்தள சான்றிதழ் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

LEED Gold மற்றும் GBI Gold சான்றிதழ்களுடன், 2026-ல் Platinum நிலையை நோக்கியும் இம்மையம் பயணிக்கிறது.

நிழ்ச்சிக்குப் பிறகு வணக்கம் மலேசியாவிடம் பேசிய கோபிந்த் சிங், “இது மலேசியாவின் பாதுகாப்பான மற்றும் பசுமை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியமான கட்டமாகும்” என வருணித்தார்.

இவ்வேளையில், ST Telemedia Global Data Centres குழுமத் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான புருனோ லோபெஸ் (Bruno Lopez) பேசுகையில், சைபர்ஜெயாவில் இந்த பசுமைப் புரட்சியில் பங்குக் கொள்ள தங்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்தார்.

Basis Bay நிறுவனத்தின் ESG நோக்கங்கள் மற்றும் Air Selangor நிறுவனத்தின் ஆதரவுடன், இத்திட்டம் மலேசியாவின் டிஜிட்டல் உருமாற்றத்தை நீடிக்கச் செய்யும் முயற்சியை முன்னெடுக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!