Latestமலேசியா

மலேசியாவிற்குள் நுழைய முயன்ற போலி சுற்றுலா பயணிகள்; தாய்நாடுகளுக்கு திரும்ப அனுப்பிய AKPS

புக்கிட் காயு ஹித்தாம், நவம்பர்- 3 ,

நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் (AKPS), நேற்று புக்கிட் காயு ஹித்தாமிலுள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தில் எட்டு வெளிநாட்டவர்களின் நுழைவைத் தடுத்து, அவர்களை அவரவர் தாய்நாடுகளுக்குத் திருப்பி அனுப்பியது.

அவர்கள் அனைவரும் உண்மையான சுற்றுலாப் பயணிகள் அல்ல என சந்தேகிக்கப்படுவதுடன், ‘syak list’ எனப்படும் சந்தேக பட்டியலில் இருந்ததோடு மட்டுமல்லாமல், “break of stay” நிபந்தனையை மீறி, போலியான ஹோட்டல் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு போன்ற ஆவணங்களைச் சமர்ப்பித்து ஏமாற்று வேலை செய்தனர் என்று AKPS புக்கிட் காயு ஹித்தாமின் மூத்த அதிகாரி முகமட் நசாருதீன் எம் நசீர் (Senior Asisten Komisioner Mohd Nasaruddin M Nasir) கூறினார்.

தடுக்கப்பட்ட எட்டு பேரும் தாய்லாந்து, சீனா, இந்தியா மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்தவர்கள் என்றும், இந்நடவடிக்கை குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டது என்றும் அறியப்படுகின்றது.

நாட்டின் நுழைவு வாயில்கள் பாதுகாப்பாக இருப்பதையும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமல் இருப்பதையும் AKPS உறுதி செய்யும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!