
சிரம்பான், ஜன 27 – ஆட்டிசம் ( Autisme ) எனப்படும் மன இறுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவனின் இடது காது மடலை விவசாய பண்ணையில் குதிரை கடித்ததால் அவனது குடும்பத்தினரின் விடுமுறை சோகமாக மாறியது.
ஜனவரி 19 ஆம் தேதியன்று மாலை 6 மணியளவில் நடந்த அந்த சம்பவம் பற்றிய வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த சிறுவனின் தந்தையால் பதிவேற்றப்பட்ட பின்னர் வைரலாகத் தொடங்கியது.
31 வயதான சுஹைமி முகமட் ரஃபி ( Suhaimi Mohd Rafi ) ஜனவரி
19 ஆம் தேதியன்று கோலாலம்பூரில் தனது வேலையை முடித்துக்கொண்டு, தனது மனைவி மற்றும் மகனுடன் விடுமுறைக்காக சிரம்பானுக்கு சென்றுள்ளார்.
அங்கு விவசாய பண்ணையில் இருந்போது தன் மகன் குதிரையுடன் படம் எடுக்க விரும்பியதால் இதற்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என குதிரையின் காவலாளி தெரிவித்தாகவும் பராமரிப்பாளரின் மேற்பார்வையில் தனது மகனை குதிரை சவாரி செய்ய அனுமதித்தாகவும் அதன் பின்னர் அங்கிருந்த வேலிகள் அமைக்கப்பட்ட பகுதியில் படம் எடுக்க குதிரை பராமரிப்பாளர் தங்களை அழைத்ததாக அவர் கூறினார்.
அங்கு சென்றபோது திடீரென அருகில் இருந்த குதிரை என் மகனின் காதை கடித்துவிட்டதோடு அவனது தலையையும் குதிரை மோதியதால் காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக என் மகனை அழைத்துச் சென்றதோடு அற்றைய இரவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மூன்று நாட்களுக்கு பின் அவன் வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டதாக சுஹைமி தெரிவித்தார்.
என் மகனின் சிகிச்சைக்காக 10,400 ரிங்கிட் செலவானது. இருப்பினும், விவசாய பண்ணை நிர்வாகம் தனக்கு 500 ரிங்கிட் மட்டுமே செலுத்த முடியும் என்று தெரிவித்தது.
அவர்கள் வாக்குறுதி அளித்தும் இதுவரை ஒரு காசு கூட கொடுக்கவில்லை. அந்த பண்ணை நிர்வாகத்தின் போக்கு குறித்து தாம் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக சுஹைமி வேதனையுடன் தெரிவித்தார்.