Latestமலேசியா

SPM முடித்தவர்களில் 8,529 இந்திய மாணவர்களுக்கு இவ்வாண்டு பொது உயர் கல்விக் கூடங்களில் வாய்ப்பு

கோலாலம்பூர், டிசம்பர்-3, SPM முடித்தவர்களில், இந்த 2024/2025 நடப்புக் கல்வியாண்டில் மொத்தம் 8,529 இந்திய மாணவர்கள் உள்நாட்டு பொது உயர் கல்விக் கூடங்களில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பொது பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் எனப்படும் தொழில் பயிற்சிக் கல்லூரிகள், சமூகக் கல்லூரிகள் ஆகியவற்றை அவ்வெண்ணிக்கை உட்படுத்தியுள்ளது.

அதே சமயம் STPM மற்றும் அதற்கு ஈடான படிப்பை முடித்தவர்களில் 4,342 இந்திய மாணவர்களுக்கு நடப்புக் கல்வியாண்டில் அரசு உயர் கல்விக் கூடங்களில் சேர வாய்ப்பு  வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற மேலவையின் கேள்வி நேரத்தின் போது வழங்கிய பதிலில் கல்வியமைச்சு அவ்விவரங்களைப் பகிர்ந்துகொண்டது.

நடப்புக் கல்வியாண்டில் அரசாங்கப் பல்கலைக்கழகங்கள், தொழில் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் சமூகக் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை குறித்து செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கேட்ட கேள்விக்கு அமைச்சு பதிலளித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!