
கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 – மாணவி ஜாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணையில், நிறுவப்பட்ட நடைமுறைகளை (SOP) மீறும, விசாரணை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது, புக்கிட் அமான் காவல்துறையின் நேர்மை மற்றும் தரநிலைகளின் இணக்கப்பாட்டு பிரிவினர் (JIPS) வழக்குக்காக அமைக்கப்பட்ட ஒரு சிறப்புக் குழுவுடன் இணைந்து இது குறித்து விசாரணை தொடங்கியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டது.
முன்னதாக, ஜாரா கைரினா மரண வழக்கில் SOP ஐப் பின்பற்றாததற்கு விசாரணை அதிகாரி ஆரம்ப கட்டத்தில் பிரேத பரிசோதனை நடத்த தவறியதே முக்கிய காரணம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக ஒழுங்கு விசாரணை அறிக்கை ஒன்று திறக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் கோத்தா கினாபாலுவிலுள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் 13 வயதான ஜாரா கைரினா இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
அதற்கு முந்தைய நாள் தனது பள்ளி விடுதிக்கு அருகிலுள்ள வடிகாலில் மயக்கமடைந்த நிலையில் மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.