
கோலாலம்பூர், பிப் 17 – ஜாலான் பந்தாய் பாரு BHP பெட்ரோல் நிலையத்திற்கு அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த Peugeot கறுப்பு நிற கார் ஒன்று திடீரென தீப்பற்றியதில் அதிலிருந்த ஓட்டுனரும் மற்றொரு பயணியும் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினர். அந்த காரின் முன்புறம் இயந்திர பகுதி தீயினால் சேதம் அடைந்தது. இன்று காலை மணி 10.30 அளவில் தனது காரில் திடீரென சத்தம் வந்ததைத் தொடர்ந்து கார் ஓட்டுனரான ஆடவரும் அதில் இருந்த பெண் பயணியும் காரிலிருந்து வெளியே இறங்கியபோது திடீரென இயந்திரப் பகுதியிலிருந்து புகை வெளிவந்ததைக் கண்டனர்.
இதனை தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே அடுத்த சில நிமிடங்களில் அருகேயுள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்து தீயை அனைத்தனர். அக்காரில் தீப்பிடித்ததற்கு அதன் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரி ஒருவர் Zakaria haji shaari நம்பிக்கை தெரிவித்தார்.