மூவார், டிசம்பர்-11 ஜோகூர், செகாமாட்டில் புல் தரையில் வைத்து பதின்ம வயது பெண்ணைக் கற்பழித்தக் குற்றத்தை, விவசாயப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த மாணவன் மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான்.
கடந்த மாதம் 15-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு, செகாமாட் ஜெமந்தாவில் (Jementah) உள்ள விளையாட்டுப் பூங்கா மைதானத்தில் 14 வயது பிள்ளையைக் கற்பழித்ததாக, 18 வயது Mohamad Azfar Asmawi குற்றம் சாட்டப்பட்டிருந்தான்.
பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையைத் தனது தந்தையிடம் கூறவே, அது குறித்து முதலில் பள்ளி நிர்வாகத்திடமும், பின்னர் போலீசிடம் அத்தந்தை புகார் செய்தார்.
Afzar, டிசம்பர் 8-ம் ஆம் தேதி விசாரணைக்காகக் கைதானான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்க குற்றவியல் சட்டம் வகை செய்கிறது.
இவ்வேளையில், Afzar-ருக்கும் பதின்ம வயதென்பதால், அவனைப் பற்றிய சமூக நலத்துறையின் சமூக அறிக்கைப் பெறப்படுவதற்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.
இதையடுத்து வரும் ஜனவரி 14-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிபதி அறிவித்தார்.
எனினும், குற்றம் சாட்டப்பட்டவனுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.