![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/360_F_177728252_PcBu43luLrX1WIfMfF0dIDQaLCzws948.jpg)
குவாலா சிலாங்கூர், பிப்ரவரி-3 – சிலாங்கூர், ஜெராமில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண் பிள்ளைகள் கற்பழிக்கப்பட்டது தொடர்பில், உறவுக்கார ஆடவர்கள் மூவர் கைதாகியுள்ளனர்.
முதல் சம்பவம் ஜெராமில் 14 வயது பிள்ளையை உட்படுத்தியது; சனிக்கிழமையன்று அச்சிறுமியின் தாத்தா போலீசில் புகார் செய்தார்.
ஆனால் தன்னைக் கற்பழித்ததே அந்தத் தாத்தா தான் என அச்சிறுமிக் கூறியதால் போலீஸ் அதிர்ச்சியடைந்தது.
அவருடன் இளம் வயது மாமாவும் அச்சிறுமியை சீரழித்துள்ளான்.
இதையடுத்து 66 வயது தாத்தாவும், 21 மாமாவும் கைதாகி, பிப்ரவரி 7 வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஜெராமில் நிகழ்ந்த இன்னொரு சம்பவத்தில், 8 வயது சிறுமியை சொந்தத் தந்தையே கற்பழித்துள்ளார்.
அச்சிறுமியின் தாய் சனிக்கிழமை இரவு அது குறித்து போலீஸில் புகார் செய்தார்.
பெற்றோர் விவாகரத்துப் பெற்று விட்ட நிலையில், வார இறுதி மற்றும் பள்ளி விடுமுறை நாட்கள் தவிர்த்து, பெரும்பாலான நாட்களில் தந்தையுடனேயே அச்சிறுமி வசித்து வந்துள்ளாள்.
33 வயது ஆவ்வாடவரும் பிப்ரவரி 7 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.