
பெர்லின், ஜூலை-30- கிழக்கு ஜெர்மனியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்நாட்டு ஆயுதப் படையின் விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது இருவர் உயிரிழந்தனர்.
மேலும் ஒருவரைக் காணவில்லை என ஜெர்மனி தற்காப்பு அமைச்சுக் கூறியது. அவரைத் தேடி மீட்க சுமார் 100 பேர் கொண்ட மீட்புக் குழு களமிறங்கியுள்ளது.
முன்னதாகக் காலையில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட அந்த EC-135 ஹெலிகாப்டர், மாலையில் ஆற்றில் விழுந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பலியான இரு விமானிகளும் அனுபவசாலிகள் ஆவர் என தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.