Latestமலேசியா

ஜெலியில் கிராம மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த 5 காட்டு யானைகள் பிடிபட்டன

ஜெலி, நவம்பர்-7 – கிளந்தான், ஜெலியில் கிராம மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்பட்ட 5 காட்டு யானைகள் பிடிபட்டுள்ளன.

குவாலா காண்டா யானைகள் சரணாலயத்தின் ஒத்துழைப்புடன், பத்து மெலிந்தாங், கம்போங் டெண்டோங்கில் நேற்று அவை பிடிக்கப்பட்டதை, மாநில வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN உறுதிப்படுத்தியது.

அந்த 5 ஆண் யானைகளும் விரைவிலேயே பாதுகாப்பான வாழ்விடத்துக்கு மாற்றப்படும்.

இதுநாள் வரை விவசாயத் தோட்டங்களையும் பயிர்களையும் நாசம் செய்து வந்த காட்டு யானைகள் பிடிபட்டிருப்பதால், கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!