
மூவார், செப்டம்பர்-4 – ஜோகூரை மேலுமொரு வலுவற்ற நில நடுக்கம் உலுக்கியுள்ளது.
இம்முறை பாரிட் சூலோங், ஸ்ரீ மேடானில் புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு ரிக்டர் அளவைக் கருவியில் 2.9-தாக அது பதிவாகியது.
இதற்கு முன் ஆகஸ்ட் 24 முதல் செகாமாட்டில் தொடர்ச்சியாக வலுவற்ற நில நடுக்கங்கள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், செகாமாட்டில் நிலநடுக்க நடவடிக்கைகளைக் கண்காணிக்க அம்மாவட்டத்தில் நில நடுக்க அளவீடுகள் பொருத்தப்பட்ட 2 நிலநடுக்க நிலையங்கள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டத்தில் தற்போது நில நடுக்க நிலையங்கள் எதுவும் செயல்படாததால், புதிய நிலையங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, செகாமாட் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரும் செகாமாட் மாவட்ட அதிகாரியுமான Mohd Ezzuddin Sanusi கூறினார்.
இந்த உத்தேச நில நடுக்க நிலையங்களில் பலவீனமான நில இயக்கங்களுக்கான அளவீடுகள் பொருத்தப்பட்டிருக்கும்;
சாலைகள் மற்றும் மனித நடவடிக்கைகளிலிருந்து தள்ளியிருக்கும் வகையில் அதற்கு பொருத்தமான இடம் தேர்வு செய்யப்படும்.
இவ்விரு நிலையங்களும் மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia-வால் ஆய்வுத் துறையால் மேம்படுத்தப்படும் என்றார் அவர்.