
ஜோகூர் பாரு, மார்ச்-22 – ஜோகூரில் வெள்ளம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
இன்று காலை 8 மணி வரைக்குமான நிலவரப்படி, 13,089 பேர் PPS எனப்படும் தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு அவ்வெண்ணிக்கை 11,766 பேராக மட்டுமே இருந்தது.
இதையடுத்து 6 மாவட்டங்களில் 95 PPS மையங்களில் 3,749 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளன.
மிக மோசமாக ஜோகூர் பாருவில் 5,042 பேர் பாதிக்கப்பட்ட வேளை, குளுவாங்கில் 2,458 பேரும், பொந்தியானில் 1,782 பேரும், கோத்தா திங்கியில் 1,690 பேரும், கூலாயில் 1,531 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகக் கடைசியாக பத்து பஹாட் மாவட்டமும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது; அங்கு 226 பேர் பாதுகாப்புக் கருதி வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இவ்வேளையில் சரவாக்கிலும் வெள்ளப் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று 435 பேராக இருந்த அவ்வெண்ணிக்கை இன்று காலை 970 பேரை நெருங்கியுள்ளது.
சபாவில் 124 குடும்பங்களைச் சேர்ந்த 379 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.