Latestமலேசியா

ஜோகூர் எல்லைச் சாவடிகளில் புதிய eGate வசதிகள்; பயணிகள் செயலாக்க திறனை இரட்டிப்பாக்கும் உள்துறை அமைச்சு

ஜோகூர், டிசம்பர் 15 – ஜோகூரிலுள்ள இரண்டு முக்கிய எல்லைச் சாவடிகளில், மாத இறுதிக்குள் பயணிகள் செயலாக்க திறன் இரட்டிப்பாகும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சுல்தான் இஸ்கண்டார் கட்டிடம் மற்றும் சுல்தான் அபு பாக்கர் வளாகத்தில் 40 புதிய NIISe eGate-களும், 145 MyNIISe QR ஸ்கேனர்களும் நிறுவப்படவுள்ளன. இவை இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் பாதசாரிகளுக்கான வழித்தடங்களில் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த மேம்பாடுகள், குறிப்பாக உச்ச நேரங்களில் ஏற்படும் நெரிசலை குறைத்து, தினசரி எல்லை தாண்டி பயணம் செய்வோரின் பயணத்தையும் எளிதாக்கும். மேலும், இணைய இணைப்பை வலுப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பயணிகள் விரைவாக குடிநுழைவுச் சோதனைகளை கடக்க MyNIISe செயலியை பயன்படுத்துமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!