
கோலாலம்பூர், டிச 9 – டிசம்பர் 12 ஆம் தேதி JB Sentralலுக்கான ETS ரயில் சேவை தொடங்கப்படுவதை முன்னிட்டு 30 விழுக்காடு சிறப்பு கட்டணக் கழிவை மலேயன் ரயில்வே பெர்ஹாட் எனப்படும் Keretapai Tanah Melayu Berhad வழங்குகிறது.
KL Sentral-JB Sentral-KL Sentral பயணச் சேவைக்கு டிசம்பர் 12 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி ஜனவரி 11 ஆம் தேதி வரையிலான பயணங்களுக்கு தள்ளுபடி சலுகை உள்ளடங்கியுள்ளதாக இன்று KTM Berhad வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயணிகள் டிக்கெட்டுகளை வாங்கும் போது JBBEST என்ற விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தி சலுகையை அனுபவிக்கலாம்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மொத்தம் 5,000 விளம்பர குறியீடுகள் வழங்கப்படுகின்றன என KTMB தலைமை தொழிற்நுட்ப அதிகாரி பொறியியலாளர் அகமட் நிஷாம் முகமட் அமின் ( Ahmad Nizam Mohamed Amin ) கூறினார்.
போக்குவரத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், சிங்கப்பூர் உட்பட அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் மூலம் ஜோகூரின் சுற்றுலாத் துறை மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் இந்த ETS ரயில் சேவை ஊக்குவிக்கின்றன.
பள்ளி விடுமுறை காலம் மற்றும் ஆண்டின் இறுதிக்கு முன்னதாக இச்சேவை சரியான நேரத்தில் தொடங்கப்படுகிறது.
மலேசியர்கள் ஜோகூருக்கு விடுமுறையில் செல்ல வாய்ப்பளிக்கும் அதே வேளையில், ஜோகூர் குடியிருப்பாளர்கள் ETS ரயில் இணைப்பு வழியாக வெளிநாட்டு இடங்களுக்கு எளிதாகப் பயணிக்க முடியும் என்று Ahmad Nizam கூறினார்.
இந்த வசதி உள்நாட்டு பயணத் சேவையை அதிகரிப்பதோடு , இரு திசைகளிலும் சுற்றுலா மற்றும் வணிக நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று Ahmad Nizam சுட்டிக்காட்டினார்.



