Latestமலேசியா

ஜோகூர் சுத்தரா மாலில் மீண்டும் Colours of India-வின் மாபெரும் விற்பனை மற்றும் கண்காட்சி!

கோலாலம்பூர், மார்ச்-15 -மலேசியாவின் முதல் நிலை இந்திய விற்பனை கண்காட்சி நிறுவனமான Colours of India, இவ்வாண்டுக்கான தனது மாபெரும் நிகழ்ச்சியை அறிவித்துள்ளது.

அவ்வகையில் *தென்கிழக்காசிய போலிவூட் பெருவிழா மற்றும் இந்திய வர்த்தகக் கண்காட்சி* எதிர்வரும் மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை ஜோகூர் பாரு சுத்தரா மால் பேரங்காடியில் நடைபெறவுள்ளது.

மக்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம், மலேசியாவின் முன்னணி மொத்த விற்பனையாளர்கள், இணையத்தில் பிரபலமாக உள்ள விற்பனையாளர்கள், வைரல் உணவு விற்பனையாளர்கள் என பலர் இந்த 7 நாள் கண்காட்சியில் கடைகளைத் திறந்திருப்பர்.

அவர்களின் பொட்களும் சேவைகளும் பெரியக் கழிவு விலையில் வழங்கப்படவுள்ளது.

ஒரே இடத்தில் 10 விழாக்கள், 100 கலைஞர்கள், சமூக ஊடக பிரபலங்கள், 1,000 போட்டியாளர்கள் என பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பெருவிழாவுக்கு, 100,000-க்கும் மேற்பட்ட வருகையாளர்களும் வாடிக்கையாளர்களும் வருவர் என Colours of India இலக்கு வைத்திருக்கிறது.

வைரல் உணவு திருவிழா, மச்சாம் மச்சாம் பிரியாணி விழா, பானிப்பூரி விழா, ஆஹா கல்யாணம் இந்தியத் திருமணக் கண்காட்சி, தெற்கு முதல் வடக்கு வரையிலான சேலை விழா, இசை மற்றும் கலாச்சாரப் படைப்புகள் என ஒரு வாரம் இந்நிகழ்ச்சி களை கட்டவுள்ளது.

தவிர, வர்ணம் தீட்டும் போட்டி, சிறார்களுக்கான ஆடை அலங்கார போட்டி, நனட போட்டி, Miss Mrs Colours of india அழகு இராணி போட்டி, பாடல் திறன் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொது மக்களுக்கு இரத்த தான முகாமும் நடத்தப்படுகிறது.

மாபெரும் உள்ளரங்கு தீபாவளி வர்த்தகக் கண்காட்சியை நடத்தி, 5 முறை மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற நிறுவனம் இந்த Colours of India திரளாக வந்து பங்கேற்குமாறு அனைவரையும் அழைக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!