
கோலாலம்பூர், பிப் 28 – இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நாயை வெளிநாட்டு ஆடவர் தாக்கும் சம்பவம் வைரலானத் தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
இன்ஸ்டாகிராம் பயணர் ஒருவர் பதிவேற்றம் செய்த காணொளியை போலீசார் கண்டதைத் தொடர்ந்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக கூலாய் போலீஸ் தலைவர் Tan Seng Lee தெரிவித்தார்.
33 வயது ஆடவர் ஒருவர் தெரிவித்த புகாரைத் தொடர்ந்து ஜோகூர் , செனாயில் வர்த்தக பகுதியில் திங்கட்கிழமை அந்த சம்பவம் நடந்ததாக முன்னோடி விசாரணையில் தெரியவந்தது.
கூலாய் போலீஸ் தலைமையகத்தின் குற்றவியல் விசாரணை பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவும் பொருட்டு 45 வயதுடைய வெளிநாட்டு ஆடவர் கைது செய்யப்பட்டார் என டான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
புகார்தாரர் நன்றாக கவனித்துக் கொண்டதால் தாக்கப்பட்ட நாயின் நிலைமை சீராக உள்ளது.
குற்றவியல் சட்டத்தின் 428 ஆது விதியின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை , அபராதம் அல்லது அவையிரண்டும் விதிக்கப்படலாம் .
2015ஆம் ஆண்டின் பிராணிகள் சமூக நலச் சட்டத்தின் 29 (1) (a) விதியின் கீழும் அந்த சந்தேகப் பேர்வழி மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.