
ஜோகூர் பாரு, செப் 9- ஜோகூர் தாமான் துன் அமினா தமிழ்ப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியோடு தேசிய தினக் கொண்டாட்டம் அண்மையில் மாணவர்களின் எழுச்சியோடும் உற்சாகத்தோடும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்சிக்கு மேலும் மெருகூட்டும் வகையில் பல போட்டிகள் மற்றும் தேசிய தின கண்காட்சியும் பள்ளியில் களைக்கட்டியது.
இவ்விழாவிற்குப் பல வாகனங்கள் தேசிய தின அலங்காரத்துடன் பள்ளி வளாகத்தில் வலம் வந்தன. ஐயா திரு.மெர்டேக்கா கந்தப்பன் சிறப்பு பிரமுகராக கலந்துகொண்ட இந்த நிகழ்வில் 68ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு 68 பறவைகள் சுதந்திரமாகப் பறக்கவிடப்பட்டன.
காலை ,மாலை என இரு வேளையிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட இந்த விழாவுக்கு மேலும் மெருகூட்டும் வண்ணம் தலைமையாசிரியர் சிவசுப்ரமணியம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டத்தோ.ராஜூ ,பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டினேஸ், திருமதி பிரியா, துணைத்தலைமையாசிரியர்கள் நூல் நிலைய உறுப்பினர்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினர்.
இந்நிகழ்ச்சியைத் தலைமையேற்று நடத்திய துணைத்தலைமையாசிரியர் திருமதி தமிழரசி தனது தலைமையுரையில் தலைமையாசிரியர் மற்றும் அவருக்கு துணையாக இருந்து தம் பொறுப்பினைச் சிறப்பாகச் செய்த ஆசிரியர் திருமதி சரஸ்பதி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.