ஜோகூர், அக்டோபர் 8 – ஜோகூர், ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 53ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி, மலேசிய தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
மாணவர்கள் விளையாட்டுத் துறையிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி ஒவ்வொரு வருடமும் விளையாட்டுப் போட்டியை நடத்தி வருகிறது.
அவ்வகையில், கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற இப்போட்டியில், ஒன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு ஆண், பெண் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
அதில், ஓட்டப்பந்தயம், ஈட்டி ஏறிதல், குண்டு வீசுதல் ஆகிய போட்டிகளில் அதிக மதிப்பெண் பெற்று மஞ்சள் இல்லம் இவ்வருடத்தின் வெற்றியாளராக மகுடம் சூட்டியது.
இல்ல அணிவகுப்பிற்கு பச்சை இல்லமும், பள்ளிச் சீருடை இயக்க அணிவகுப்பிற்கு செம்பிறைச் சங்கமும் முதலிடம் பிடித்த நிலையில், பள்ளியின் விளையாட்டு வீரராகச் கார்த்திகேயனும், விளையாட்டு வீரங்கனையாகச் லஷ்மித்தாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இப்போட்டி விளையாட்டில் சிறப்பு விருந்தினராக, ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினரின் செயலாளினி, மலேசியாவின் தங்க மகன் விருந்து பெற்ற டத்தோ டாக்டர் சந்திரன், பள்ளியின் தலைமையாசிரியர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.