ஜோகூர் பாருவில், ஹோட்டல் இரண்டாம் மாடியிலிருந்து விழுந்த சீனப் பெண் படுகாயம்

ஜோகூர் பாரு, நவம்பர்- 3,
இன்று காலை, பண்டார் பாரு பெர்மாஸ் ஜெயா பகுதியில் உள்ள ‘ஹோட்டல்’ ஒன்றின் இரண்டாம் மாடியிலிருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் சீன நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பலத்த காயமடைதுள்ளார்.
தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மீட்பு பணி வேளைகளில் ஈடுபட்டனர் என்று ஜோகூர் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் மூத்த தீயணைப்பு அதிகாரி ஷபி முகமட் டோன் (Shafie Md Don) தெரிவித்தார்.
39 வயதுடைய அப்பெண் ஹோட்டலின் முதல் மாடியிலிருக்கும் லிப்ட்டின் முன்புறத்தில் விழுந்த நிலையில் இருந்தார் என்றும் மேலும் அவருடன் மருத்துவ குழுவினர்கள் இருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்து.
பின்னர், மீட்பு குழுவினர் உதவியுடன் அப்பெண் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அம்மாது தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் சம்பவம் குறித்த விசாரணைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அறியப்பட்டது..



