Latest

ஜோகூர் பாருவில் 4 கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் மரணம்

ஜோகூர் பாரு , ஜன 4 – ஜோகூர்பாரு, ஜாலான் Dedap, Taman Johor Jaya வீடமைப்பு பகுதியில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட
சாலை விபத்தில் நிசான் GT- R கார் ஓட்டுனர் உட்பட இருவர் மரணம் அடைந்தனர். நேற்று மாலை மணி 3.20 அளவில் GT- R, Kia Picanto , இரண்டு புரோடுவா Axia கார்களை இந்த விபத்து உட்படுத்தியதாக ஸ்ரீ அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சொஹாய்மி இஷாக் ( Sohaimi Ishak ) தெரிவித்தார். GT-R கார் ஓட்டுநரான உள்நாட்டைச் சேர்ந்த 29 வயது ஆடவர் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து இந்த விபத்து ஏற்பட்டது.

எதிர் பாதையில் நுழைந்த அந்த வாகனம், 58 வயது உள்ளூர் பெண் ஓட்டிச் சென்ற கியா பிகாண்டோ மற்றும் இதர இரண்டு பெரோடுவா ஆக்சியா கார்கள் மீது மோதியதால், அவர்கள் சாலையின் வலதுபுறம் விழுந்தனர். இந்த விபத்தின் விளைவாக GT- R காரின் ஓட்டுநர் தலையில் கடுமையாக காயம் அடைந்ததால் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார். பெரோடுவா ஆக்சியாவின் 30 வயது ஓட்டுநர் தலையில் பலத்த காயம் அடைந்து, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் (HSI) சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. சிறிய காயங்களுக்கு உள்ளான இதர நால்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துத் துறை சட்டத்தின் 41 (1 ) ஆவது பிரிவின் கீழ் இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சொஹாய்மி இஷாக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!