
ஜோகூர் பாரு, ஜன 27 – ஜோகூர் மாநில ஒற்றுமை பொங்கல் விழா ஜோகூர் லிட்டல் இந்தியா பகுதியில் மிகவும் கோலாலகலமாக நடைபெற்றதோடு அந்நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மிகவும் ஆர்வத்தோடு திரண்டனர். ஜோகூர் மாநில ம.இ.கா தலைவரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ரவின் குமார் கிருஷ்ணசாமி அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைத்த இந்த பொங்கல் விழாவில் பொங்கல் வைக்கும் நிகழ்வு, மாட்டுப் பொங்கல் , பல்வேறு போட்டி விளையாட்டுகள், பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டின.
சுற்று வட்டார பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுப் பயணிகளும் இந்த நிகழ்ச்சியை கண்டு பரவசம் அடைந்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஒன்றுமை பொங்கல் நிகழ்ச்சி மதியம்வரை மிகவும் விருவிப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்சியில் மாநில ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ நிலா ராஜா, மாநில ம.இ.காவின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தொகுதி தலைவர்கள், மாநில இளைஞர் பிரிவு ,மகளிர் பிரிவு, புத்ரா மற்றும் புத்ரி பிரிவின் தலைவர்கள் , தேசிய ம.இ.காவின் இளைஞர் பிரிவு தலைவர் அர்ந்விந்த்,தேசிய மகளிர் பிரிவு தலைவி மற்றும் அதன் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி எல்லா வகையிலும் சிறப்பாக நடைபெறுவதற்கு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் ஜோகூர் மாநில இளைஞர் பிரிவு தலைவர் மோகன் அருணாச்சலம் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இதனிடையே பகாங் ம.இ.கா மகளிர் பகுதியின் பொங்கல் விழாவும் பெந்தோங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பகாங் மாநில ம.இ.கா தலைவரும் சபாய் சட்டமன்ற உறுப்பினருமான வி.ஆறு முகம் தொடக்கிவைத்தார். தமிழ் சமூகத்தின் ஒற்றுமை திருநாளாக மட்டுமின்றி உழவர்களின் திருவிழாவாகவும் பொங்கல் இருப்பது இந்த நிகழ்ச்சியை கொண்டாதுவது குறித்து நாம் பெருமை அடைகிறோம் என அவர் தெரிவித்தார். இந்திய சமூகம் தொடர்ந்து ஒற்றுமையுடன் இருந்தால் பல்வேறு நன்மைகளை அடையமுடியும் என்பதற்கு பொங்கல் திருநாள் மற்றொரு உதாரணமாக இருக்க வேண்டும் என ஆறுமுகம் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ம.இ.காவின் உதவித் தலைவர் டத்தோ T.முருகையா மற்றும் பகாங் மாநில ம.இ.காவின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.