
பாகோ, டிசம்பர்-28 – ஜோகூர், பாகோ அருகே புக்கிட் கெப்போங்கில் இன்று காலை 8.55 மணியளவில் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறை அதனை உறுதிப்படுத்தியது.
இந்த நிலநடுக்கம் வலுவற்றது என்பதால் எந்த உயிரிழப்பும், சேதமும் ஏற்படவில்லை.
அருகிலுள்ள பகுதிகளில் மக்கள் சிறிய அதிர்வுகளை உணர்ந்ததாக கூறினாலும், நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளது.
அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதால், பொது மக்கள் அச்சமின்றி நிதானம் காக்குமாறு மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி அறிவுறுத்தியுள்ளார்.
ஜோகூரில், செகாமாட், பத்து பஹாட் போன்ற இடங்களில் கடந்த ஆகஸ்டில் இருந்து பலமுறை இதுபோன்ற வலுவற்ற நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன.
மலேசியா பெரும் நிலநடுக்கப் பகுதிகளில் இல்லை என்பதால், இத்தகைய சிறிய அதிர்வுகள் பெரும் ஆபத்தாக கருதப்படவில்லை.



