
கோலாலம்பூர், ஜூலை 21 – நேற்று, தலைநகரிலிருக்கும் ம.இ.கா வின் நேதாஜி மண்டபத்தில், மலேசிய தமிழ் அமைப்புகள் பேரவையின் ஆதரவோடு நாடறிந்த எழுத்தாளர் டாக்டர் எம்.குமரவேலுவின் ‘தையும் மெய்யும்’ நூல், டான் ஸ்ரீ டத்தோ நடராஜா தலைமையில் வெளியீடுக் கண்டுள்ளது.
காலத்தின் தேவைக்கேற்ப வெளிவந்த இந்நூலை டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அவர்கள் அதிகாரபூர்வமாக வெளியீடு செய்து வந்திருந்த மக்களுக்கு தனது கையாலே நூலை எடுத்து வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளராக முன்னாள் துணை அமைச்சர் டான் ஸ்ரீ கே. குமரன், தமிழ் அமைப்புகளின் பேரவை தலைவர் திரு எஸ்.எஸ். பாண்டியன், நூல் ஆய்வாளர் திரு எம். கோபாலன் தமிழரசு மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் வந்து கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளனர்.
நூல் வெளியீடு மட்டுமல்லாமல், தமிழ் பெரும் மக்கள் சிலருக்கும் இந்நிகழ்வில் சிறப்பு செய்யப்பட்டுள்ளது. அதில், முனைவர் மனோன்மணி, மலேசிய தமிழ் எழுத்தளார் சங்கத் தலைவர் ராஜேந்திரன் பெருமாள், ஐயா திருமாவளவர், சி.எம் அண்ணாதுரை மற்றும் திரு தர்மலிங்கம் ஆகியோரும் உள்ளடங்குவர்.
பல காலமாக மலேசிய நாட்டில் தமிழரின் புத்தாண்டு தொடர்பான சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்புத்தகம் வெளிவந்துள்ளதென்றும் பலரின் வினாக்களுக்கு இது விடையளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் மலேசிய தமிழர்களுக்கு நல்வழிகாட்டியாகவும், அவர்களை ஒருமித்த சிந்தையுடன் செயலாற்றச் செய்யவும் டாக்டர் குமரவேலுவின் தையும் மெய்யும் நூல் நிச்சயம் துணை புரியும்