Latestமலேசியா

டாங்கி லாரியுடன் 3 கார்கள் மோதல்; ஈப்போ அருகே PLUS நெடுஞ்சாலையில் 20km நெரிசல்

ஈப்போ, டிசம்பர் 22-இன்று பிற்பகல் ஈப்போ – சிம்பாங் பூலாய் அருகே PLUS நெடுஞ்சாலையில் ஒரு டாங்கி லாரியுடன் 3 கார்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

டாங்கி லாரி கட்டுப்பாட்டை இழந்து வலப்புறம் திரும்பி, Honda City காரை மோதியது.

பின்னர் லாரி கவிழ்ந்து தடுப்புச்சுவரில் மோதியதால், Toyota Vios மற்றும் Isuzu Dmax வாகனங்களும் பாதிக்கப்பட்டன.

இதில் Honda City காரில் பயணித்த 41 வயது ஆடவர் மற்றும் 13 வயது சிறுவன் தலை மற்றும் கையில் காயமடைந்தனர்.

இருவரும் ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

விபத்து காரணமாக வடக்கு நோக்கிச் செல்லும் PLUS நெடுஞ்சாலையில் 20 கிலோ மீட்டருக்கும், தெற்கு திசையில் 11 கிலோ மீட்டருக்கும் கடும் நெரிசல் ஏற்பட்டதை PLUS நிறுவனம் உறுதிப்படுத்தியது.

நிலைமை மேம்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு அனைத்து பாதைகளும் திறக்கப்பட்டாலும், போக்குவரத்து சற்று மெதுவாகவே நகர்வதாகக் கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!