Latest
டிக் டாக் காணொளியில் சிக்கிய புலி தலை; உள்ளூர் நபர் விசாரிக்கப்படுகின்றார்

கோலாலும்பூர், ஏப்ரல் 25- 49 வயது மதிக்கத்தக்க நபர், தமது வீட்டில் புலியின் தலை மற்றும் தோலைக் காட்சிப் பொருளாக வைத்திருக்கும் காட்சி டிக் டாக்கில் வைரலானது தொடர்ந்து, அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பொதுமக்கள் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து, வனநல காவல்துறை அதிகாரிகள் அந்நபரின் வீட்டிற்குள் நுழைந்து பரிசோதனையிட்டு அவரைக் கைது செய்தனர்.
மலேசியாவின் தேசிய விலங்கு மற்றும் எண்ணிக்கையில் குறைந்து வரும் புலியின் பாகங்களை வீட்டின் அலங்கார பொருளாக பயன்படுத்திய அந்நபர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்படுகின்றார்.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 100,000 ரிங்கிட் முதல் 500,000 ரிங்கிட் வரை அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது