
கோலாலாம்பூர், நவம்பர்-10,
மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான மஹிமா, இன்று GRASP Software Solution Sdn. Bhd. நிறுவனத்துடன் முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை (MoU) கையெழுத்திட்டுள்ளது.
மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார் முயற்சியிலான இந்த ஒத்துழைப்பின் மூலம், ‘Temple Management System’ எனும் புதிய டிஜிட்டல் தளம் அறிமுகமாகிறது.
இது, மலேசியா முழுவதும் உள்ள இந்து கோவில்களின் நிர்வாகத்தை நவீனப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் மூலம், கோவில்கள் தங்கள் பணிகளை ரொக்கமற்ற, காகிதமற்ற, மற்றும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ள முடியும்.
“இந்த அமைப்பு, கோவில்களின் நிர்வாகத்தில் திறமை, பொறுப்பு மற்றும் தொழில்முறை அணுகுமுறையை கொண்டு வரும். இது நமது மத மற்றும் பாரம்பரிய மதிப்புகளை காத்து, சமூக முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்” என சிவகுமார் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதற்கு, மஹிமா, TEAM DSK மற்றும் GRASP Software இணைந்து, தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கவுள்ளனர்.
ஆனால், தொழில்நுட்ப உதவி மற்றும் பராமரிப்புக்காக, ஆலயங்கள் மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த ஒத்துழைப்பு மலேசியாவில் மலேசியாவில் மத நிறுவனங்களின் டிஜிட்டல் உருமாற்றத்திற்கான ஒரு தேசிய முன்னுதாரணமாக இருக்கும்.
அதோடு, இந்து சமூகத்தின் ஒற்றுமை, திறமை மற்றும் முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் என்றார் அவர்.



