Latestமலேசியா

டுங்குனில் மின்கம்பியுடன் மோதிய MPV; இருவர் உயிரிழப்பு

டுங்குன், டிசம்பர்-29 – திரங்கானு, டுங்குனில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை சுமார் 7.30 மணியளவில், Jalan Paka-Bandar Al Muktaffi Billah Shah சாலையில் ஒரு Toyota Avanza MPV வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பியுடன் மோதியது.

வாகனத்தில் மொத்தம் 8 பேர் இருந்தனர்; 6 பேர் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர்,

21 வயதான Muhammad Asyraf Mohd Zahir மற்றும் 27 வயது பாகிஸ்தானிய ஆடவர் Siraj Norman இருவர் மட்டும், நொறுங்கிய வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களைத் தீயணைப்பு – மீட்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!