
சன் பிரான்சிஸ்கோ , மார்ச் 24 – எலோன் மஸ்க் டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை கையகப்படுத்தி X என மறுபெயரிட்டபோது, அந்த நிறுவனத்தின் சன் பிரான்சிஸ்கோ (San Francisco) முன்னாள் தலைமையகத்திலிருந்து அகற்றப்பட்ட டுவிட்டரின் பறவை சின்னம் கிட்டத்தட்ட 35,000 அமெரிக்க டாலருக்கு ( 155,142 ரிங்கிட்) ஏலத்தில் விற்கப்பட்டது.
அரிய மற்றும் சேகரிக்கக்கூடிய பொருட்களை கையாளும் RR ஏல நிறுவனம் , 12 அடிக்கு 9 அடி அளவுள்ள 254 கிலோ கொண்ட பறவை சின்னம் 34,375 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. \
எனினும் வாங்கியவரின் பெயர் அதில் குறிப்பிடவில்லை.
மஸ்க் முன்பு முன்னாள் ட்விட்டரில் இருந்து பிற பொருட்களை ஏலம் எடுத்திருந்தார். அவற்றில் அடையாளங்கள் மற்றும் நினைவுப் பொருட்கள் முதல் சமையலறை உபகரணங்கள் மற்றும் அலுவலக தளவாடங்கள் போன்ற மிகவும் சாதாரணமான பொருட்களும் அடங்கும்.
ஏலத்தில் கணிசமான தொகையைப் பெற்ற பிற தொழில்நுட்ப வரலாற்றுப் பொருட்களில் 375,000 அமெரிக்க டாலருக்கு (1.66 மில்லியன் ரிங்கிட் ) விற்கப்பட்ட துணைக்கருவிகள் கொண்ட ஆப்பிள்-1 கணினி, 1976 இல் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) கையெழுத்திடப்பட்ட ஆப்பிள் கம்ப்யூட்டர் கோ. (Apple Computer Co) காசோலை மற்றும் அதன் தொகுப்பில் சீல் வைக்கப்பட்ட முதல் தலைமுறை 4GB ஐபோன், 87,514 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது.