Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

டெஸ்லா சைபர் டிரக்கை வெடிக்கச் செய்த அமெரிக்காவின் சிறப்புப் படையைச் சேர்ந்த நபர் தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை

லாஸ் வெகாஸ், ஜன 3 – அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பிற்கு சொந்தமான லாஸ் வெகாஸ் ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் என்ற மின்சார டிரக்கை வெடிக்கச் செய்த அமெரிக்காவின் சிறப்புப் படையைச் சேர்ந்த நபர், பிறகு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட சந்தேக நபர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதற்காக காரணம் மற்றும் நோக்கம் இன்னும் அறியப்படவில்லை. கிரீன் பெரெட்ஸி குழுவின் உறுப்பினரான 37 வயதுடைய , மேத்யூ லிவல்ஸ்பெர்கர் ( Matthew Liveisberger ) தாம் எடுத்த வாடகை வாகனத்தில் தற்கொலை செய்து கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகனத்தில் எண்ணெய் கலன் மற்றும் வானவெடி இருப்பது கண்டறியப்பட்டதோடு பின்னர் அது தீப்பிடித்து வெடித்தது. அடையாளம் தெரியாத அளவுக்கு Liveisberger ரின்
உடல் கருகி சிதைந்திருந்தது . அந்த வாகனத்தில் அவர் மட்டுமே இருந்ததாக லாஸ் வெகாஸ் போலீஸ் அதிகாரி கெவின் மெக்மஹில் ( Kevin MCMahill) தெரிவித்தார். லிவல்ஸ்பெர்கரின் ராணுவ பாஸ், கடப்பிதழ் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் அவரது உடல் அடையாளம் காணப்பட்டதோடு , தலை மற்றும் காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் காணப்பட்டதாக லாஸ் வெகாஸில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Kevin MCMahill கூறினார். Liveisberger இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாற்காக காரணம் தெரியவில்லையென FBI உளவு அதிகாரி Spencer Evans தெரிவித்தார். இதனிடையே திங்கட்கிழமையன்று Leveisberger இரண்டு துப்பாக்கிகளை வாங்கியதாகவும் அவை அந்த வாகனத்தில் காணப்பட்டதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!