ஃபுளோரிடா, நவம்பர் -9, அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டோனல்ட் டிரம்ப்பின் Mar-a-Lago பண்ணை வீட்டில், அதிநவீன இராணுவத் தொழில்நுட்பங்கள் வாயிலாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில் ஃபுளோரிடா மாநிலத்தில் கடற்கரை ஓரமாக உள்ள ட்ரம்ப்பின் வீட்டைச் சுற்றி, இயந்திர நாய்கள் (robotic dogs) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
ட்ரம்பின் பாதுகாப்பு அதிமுக்கியம் என்பதால் அந்த உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அந்த இயந்திர நாய்களின் உடலில் கண்காணிப்புத் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
அதோடு பாதுகாப்பு செயல்பாடுகளை ஆதரிக்கும் அதிநவீன சென்சர் அம்சங்களும் அதிலிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக ஜனவரி 20-ஆம் தேதியே ட்ரம்ப் பதவியேற்கவிருப்பதால், அதுவரை அவர் தனது பண்ணை வீட்டில் பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தின் போது காதில் துப்பாக்கிச் சூடு பட்டு டரம்ப் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.