வாஷிங்டன், நவம்பர்-9,அதிபர் தேர்தல் முடிவால் விரக்தியடைந்துள்ள அமெரிக்கர்கள், “மலேசியாவுக்கு திரும்பிப் போகலாம்” என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மலேசிய நகைச்சுவையாளர் ரோனி ச்சியெங் (Ronny Chieng) கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான The Daily Show-வில் பேசிய போது, தனது மலேசியக் கடப்பிதழைக் காட்டி ரோனி அவ்வாறு நகைச்சுவையாகக் கூறினார்.
எதிர்பார்ப்புகளை மீறி டோனல்ட் டிரம்ப்பே மீண்டும் அதிபராகியிருப்பதால் சோர்வுற்றுள்ள தங்களுக்கு ஆறுதலாக சில வார்த்தைகளைக் கூறுமாறு, அந்நிகழ்ச்சியின் இணை அறிவிப்பாளர் Desi Lydic கேட்ட போது ரோனி அவ்வாறு சொன்னார்.
“ட்ரம்ப்பின் பதவிக்காலம் முடியும் வரை கடப்பிததை எடுத்துக் கொண்டு மலேசியா போய் விடுங்கள்” என ரோனி கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
அவரின் அந்த பதிலை, மலேசிய சமூக வலைத்தளவாசிகள் ‘கொண்டாடி’ வருகின்றனர்.
மலேசியர்களாக இருப்பதில் அதுவும் தங்களுக்கு பெருமையே என பெரும்பாலோர் கருத்துக் கூறினர்.
ஜோகூர் பாருவைச் சேர்ந்த ரோனி தனது மலேசியக் கடப்பிதழை இப்படி பெருமையாகக் காட்டுவது இது முதல் முறையல்ல.
The Daily Show நிகழ்ச்சியில் அடிக்கடி பங்கேற்கும் ரோனி, Crazy Rich Asians, Godzilla vs Kong உள்ளிட்ட ஹோலிவூட் படங்களில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.