பியோங் யாங், அக்டோபர்-28, ட்ரோன்களை அனுப்பி தனது வான்வெளியில் தென் கொரியா மீண்டும் அத்துமீறியிருப்பதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
ட்ரோன்களில் விஷமத் துண்டுபிரசுரங்களைப் போடுவதன் மூலம், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு தென் கொரியா கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக பியோங் யாங் கூறியது.
இம்மாதம் மட்டுமே குறைந்தது 3 முறை ட்ரோன்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கடைசியாக அக்டோபர் 8-ம் தேதி எல்லைப் பகுதியிலிருந்து வான்வெளிக்குள் அத்துமீறிய தென் கொரியாவின் ட்ரோன், வட கொரிய வெளியுறவுத்துறை அமைச்சு மற்றும் தற்காப்புத்துறை அமைச்சின் கட்டடங்களில் துண்டுபிரசுரங்களைப் போட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும் வட கொரியாவின் அக்குற்றச்சாட்டு குறித்து தென் கொரிய தற்காப்பு அமைச்சு இதுவரை அதிகாரப்பூர்ர அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.
என்றாலும் தாங்கள் கருத்துரைக்க வேண்டிய அளவுக்கு வட கொரியாவின் குற்றச்சாட்டு ஒன்றும் தகுதியானது அல்ல என சியோல் கேலியாகக் கூறியது.
இரு கொரியாக்களுக்கும் இடையே அண்மைய சில ஆண்டுகளாக மோதல் முற்றி வருவதால், கொரிய தீபகற்பம் பதற்றம் மிகுந்து காணப்படுகிறது.