
மூவார், ஜன 17 – 15 வயது மாணவியை கற்பழித்ததன் தொடர்பில் லோரி ஓட்டுநர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இம்மாத தொடக்கத்தில்தான் அந்த லோரி ஓட்டுநர் டேட்டிங் தளத்தில் அம்மாணவிக்கு அறிமுகமானதாக கூறப்பட்டது.
ஜனவரி 3ஆம்தேதி காலை ஆறு மணிக்கும் பிற்பகல் 2 மணிக்குமிடையே பத்து பாஹாட்டிலுள்ள ஹோட்டல் ஒன்றில் 26 வயதுடைய Syahirul Zulkipli இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டான்.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை அந்த இளைஞன் மறுத்ததைத் தொடர்ந்து 10,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டான்.
வழக்கு விசாரணை முடிவடையும்வரை மாதந்தோறும் ஒரு முறை அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதோடு சாட்சியை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அந்த நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த குற்றச்சாட்டு மார்ச் 10 ஆம்தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.



