புதுடில்லி, அக் 16, புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு ஆலயங்களில் பூஜை செய்து தேங்காய் உடைக்கும் வழக்கத்தை இந்துக்கள் வழக்கமாக பின்பற்றுவார்கள். இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் ஹெக்கர்மான்
(Philip Ackemann) தாம் புதிதாக வாங்கிய பி.எம். டபிள்யூ மின்சாரக் காருக்கு புதுடில்லியில் இந்து பாரம்பரியப்படி பூஜை செய்த பின் தேங்காய் உடைத்தார். அதோடு திருஷ்டி கழிப்பதற்காக பச்சை மிளகாயுடன் சேர்த்து எலுமிச்சை பழத்தையும் காரில் தொங்கவிட்டதை தமது இன்ஸ்டாகிராமில் பதியவிட்டு அவர் அசத்தியுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.