Latestமலேசியா

தான் இருந்த கழிவறைக்குள் புகுந்த பெண் தன்னை குற்றஞ்சாட்டுகிறார்; நீதிபதியிடம் ஆடவர் முறையீடு

குளுவாங், டிச 19 – தான் இருந்த கழிவறைக்குள் புகுந்த பெண் தன்னையே குற்றஞ்சாட்டுவதாக பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள முகமட் சபோர் நசீர் என்ற ஆடவர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியிடம் இன்று முறையிட்டார்.

இச்சம்பவத்தில், அந்த பெண் குத்தியதில் வலது கண் வீங்கியுள்ளது.

இந்நிலையில் தனக்கு ஜாமின் தொகையை குறைக்கும்படி அந்த 34 வயதுடைய ஆடவர் நீதிபதியிடம் முறையிட்டார்.

குளுவாங், Laman Kreatif Kampung Melayuவில் உள்ள பொது கழிவறையில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி மாலை மணி 5.20 அளவில் பெண்கள் கழிவறையில் புகுந்து அங்கிருந்த பெண்ணுக்கு எதிராக பாலியல் தாக்குதல் நடத்தியதாக அந்த ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனிடையே, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு நீதிபதி 10,000 ரிங்கிட் ஜாமின் அனுமதித்ததோடு வழக்கு மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என நிர்ணயித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!