
கிள்ளான், நவம்பர்-11,
கிள்ளான், தாமான் ஸ்ரீ செந்தோசாவில், 27 வயது ஆடவன் நிர்வாணக் கோலத்தில் தனியொரு பெண்ணின் வீட்டில் புகுந்து திருட முயன்று பரபரப்பை ஏற்படுத்தினான்.
அப்பெண், துணியை காய வைப்பதற்காக வெளியே சென்றபோது, வீட்டின் இரும்புக் கதவு கதவு திறந்த சத்தம் கேட்டுள்ளது.
அதே வீட்டில் தங்கியிருக்கும் நண்பர் தான் என நினைத்து முதலில் அவர் அந்த சத்தத்தை பொருட்படுத்தவில்லை.
எனினும் திரும்பியபோது, நிர்வாணக் கோலத்தில் மர்ம நபர் வீட்டுக்குள் நின்றிருந்தது கண்டு அவர் அதிர்ந்துபோனார்.
அவ்வாடவன், பூட்டப்படாத பின்பக்க கதவு வாயிலாக வீட்டுக்குள் நுழைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அப்பெண் தப்ப முயன்றபோது, அந்நபர் தாக்கி பிடிக்க முயன்றதால், வீட்டுக்குள்ளேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் அப்பெண்ணின் கைப்பேசியை எடுத்து கொண்டு அவன் தப்பியோடினான்.
போலீஸில் புகார் செய்யப்பட்ட நிலையில், சில மணி நேரங்களில் அந்த நிர்வாண ஆசாமி சிக்கினான்.
அவர் ஏற்கனவே கொள்ளை, திருட்டு மற்றும் போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டவன் என தெரியவந்தது.
சிறுநீர் பரிசோதனையில் அவன் கஞ்சா உட்கொண்டதும் உறுதிச் செய்யப்பட்டது.



