பத்து பஹாட், ஜன 2 – தனது 84 வயது தாயார் மரணம் அடைந்த சோகம் தாங்காமல் இரண்டு மணி நேரத்திற்குள் அவரது மகளும் இறந்தார். தனது தாயார் Bayah Sadiran நேற்று மாலை மணி 6.45 அளவில் இறந்தார் என்ற செய்தியறிந்து 58 வயதுடைய Saonah Kasmi பாரிட் சுலோங்கிலுள்ள தனது இளைய சகோதரியின் வீட்டிற்கு வந்துச் சேர்ந்து இறுதி சடங்கிற்காக அங்கு காத்திருந்தார். அவருக்கு இருதயப் பிரச்சனைகள் இருந்தது. எங்கள் தாயாருடன் மிகவும் அணுக்கமாக இருந்த அவர் அவரது மரணச் செய்தியால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார் என Saonah Kasmiயின் சகோதரி Saripah செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தாயாரின் மரண செய்தி அறிந்தபோதே Saonah உடல் நலமின்றிதான் இருந்தார். எனினும் தாயாரை இறுதிமுறை பார்க்க வேண்டும் என்பதற்காக அவர் எங்கள் வீட்டிற்கு வந்து தாயாரின் உடலுக்கு அருகே அமர்ந்திருந்தார். சில நிமிடங்களுக்குபின் சுயநினைவின்றி சாய்ந்தார். அவர் இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாக Saripah தெரிவித்தார். மாலை மணி 6.45 அளவில் எங்களது தாயார் மறைந்தார். ஒரு மணி நேரத்திற்கு பின் அவரது அருகிலேயே தனது சகோதரியும் இறந்தால் தாங்கமுடியாத சோகத்தில் நாங்கள் இருக்கிறோம் என Saripah வேதனையோடு கூறினார்.